Friday, March 10, 2006

நிலா - 1




கவிதாயிணி
_____________
நான் மிக ரசித்த
உன் வரிகளை
வாசற் கதவோரம் நின்று
வாசிக்கின்றாய்.




உன் விழிகளில்
பளிச்சிட்ட பெருமிதம்..!
அதனால் என் உள்ளம்
ஏறிய உச்சானிக் கொம்பு.
கன்னத் தசைகளை
இறுக்கமாக்கிக் கொண்டு
பார்வையை கூர்மைப் படுத்தி
ஒவ்வொரு வார்த்தையிலும்
வியக்கின்றாய்.



என்ன நினைத்தாய்?
நல்ல ரசனை படைத்தவள் என்றா?



பொன்னில் பொறித்த
உன் ஒவ்வொரு கவிதையும்
இரவெல்லாம், நான் நிலவில்
அலசி முடித்த காவியங்கள்.



நீ என்னடா என்றால் -
நீதானடி பெரிய கவிதாயிணி, என்று
நல்லடக்கத்தோடு
நெடும் புன்னகை செய்தாய்.
கவிதாயிணியா.. நானா?

- கற்பகம் இளங்கோவன்

0 Comments:

Post a Comment

<< Home